அயோக்யா எப்போது ரிலீஸ்? – அறிவித்தார் விஷால்

0
136


தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கான அயோக்யாவில் விஷால் நடித்துள்ளார். ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

டெம்பர் படம் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. புரி ஜெகன்நாத் இயக்கிய அந்தப் படத்தை ரோஹித் ஷெட்டி இந்தியில் சிம்பா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரன்வீர் சிங் நாயகனாக நடித்த சிம்பா கடந்த டிசம்பரில் வெளியாகி 200 கோடிகளுக்கு மேல் இந்தியாவில் மட்டும் வசூலித்தது. இரு மொழிகளில் வெற்றிவாகை சூடிய படம்தான் தமிழில் அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வெங்கட் மோகன் என்ற முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார்.

பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், தேவதர்ஷினி, சனா கான் என பலர் நடித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 19 வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், மே 10 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏப்ரல் 19 காஞ்சனா 3 திரைக்கு வருவதால் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here