அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 16 பேரின் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அயனாவரம் மகளிர் போலீஸார் வழக்கின் விசாரணையை முடித்து, 17 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தங்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 16 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்திருந்தனர். இவ்வழக்கு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 16 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு இவ்வழக்கில் இருந்து விரைவில் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்