அம்மா உணவகங்களில் மே 17 வரை உணவு இலவசம்

0
121

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவருந்தும் பொருட்டு, இதுவரை இலவசமாக உணவு அளிக்கப்பட்டுவந்த அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நேற்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் பல இடங்களில் அம்மா உணவகங்களில் பணம் கொடுத்து உணவு பெறுவதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து, ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள மே 17 வரை சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17 வரை மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக ஆகும் செலவை தன்னார்வர்லர்கள் ஏற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here