சமந்தாவுக்கும் அவரது பெற்றோருக்கும் தகராறு என்று கோலிவுட்டில் பரவலாக ஒரு பேச்சு பரவியுள்ளது. அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் தனது தாய் குறித்து சமந்தா சமூகவலைத்தளத்தில்ஒரு பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில்,’எனது தாய் செய்யும் பிரார்த்தனையில் எப்போதும் நான் நம்பிக்கை கொண்டிருப்பேன். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் மேஜிக் செய்திருக்கிறது. சிறுமியாக இருந்த போது எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் நான் கேட்பேன். இப்போதும் அப்படித்தான் கேட்கிறேன். 

அதற்கு காரணம் எனக்காக அவர் அதை செய்வார் என்பது தெரியும். எனது தாயிடம் உள்ள மிகச் சிறந்த பண்பு என்னவென்றால் தனக்காக ஒருபோதும் அவர் பிரார்த்திப்பதில்லை. கடவுளுக்கு அடுத்தபடி அம்மாவைத்தான் சொல்வேன். லவ் யூ அம்மா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உருக்கமான இப்பதிவின் மூலம் தாயுடன் தனக்கு மோதல் இருப்பதாக சொல்பவர்களின் வாயை அடைத்திருக்கிறார் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here