உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலைக்கு காவி நிற வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அம்மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர், காவி நிறத்தை நீக்கிவிட்டு அதில் நீல நிற பெயிண்ட் அடித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற பின், தலைமைச் செயலகம், முக்கிய அரசு அலுவலகங்கள், முதல்வர் இல்லம், ஹஜ் கமிட்டி அலுவலகம், பள்ளிக்கூடப் பைகள் என அனைத்தும் காவி வர்ணத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அம்மாநிலத்தின் படாவுன் நகரத்தில், சில தினங்களுக்கு முன்னர் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை, மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டது. இதில் வழக்கமாக நீலநிறத்தில் காணப்படும் அம்பேத்கர் சிலைக்கு, தற்போது காவி நிற வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்நிலையில் உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஹிமேந்திர கவுதம், காவி நிறத்தை நீக்கிவிட்டு அதில் நீல நிற பெயிண்ட் அடித்தார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்