கேரள மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. இதனையடுத்து திரிபுராவின் திரிபுராவின் பெலோனியா நகரிலிருந்த லெனின் சிலையை, பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக பாஜக நகரச் செயலாளர் முத்துராமன், பிரான்சிஸ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். அதேபோன்று மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையையும், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் மவானா என்னும் பகுதியிலிருந்த அம்பேத்கர் சிலையையும் மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர்.

இந்தத் தொடர் சம்பவங்களால் அதிருப்தியடைந்த பிரதமர் மோடி புதன்கிழமை (நேற்று), இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

gandhi

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலிபரம்பா என்னும் பகுதியிலிருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ambeedkar

அதேபோன்று, சென்னை திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலை மீது பெயிண்ட் வீசிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here