அமெரிக்க நிறுவனமான பிரபல ‘கார்மின்’ வாட்ச் நிறுவனம், அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியாவிலேயே முதல்முறையாக  அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ‘வெனு’ ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்ச்சியான ஐ.எப்.ஏ 2019ல் வெளியிடப்பட்டது. 

வெனு & விவோஆக்டிவ் 4 ஸ்மார்ட் வாட்சுகள், கார்மின் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பக் குழுவின் சமீபத்திய உருவாக்கம் ஆகும். பொதுவாக உடல்நலம் மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்கள் இதில் இருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. 

‘கார்மினின் முதல் அமோல்டு டிஸ்ப்ளே ஸ்மார்ட் வாட்ச் ‘வெனு’வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கடிகாரம் எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் வண்ணங்களைச் சேர்க்கும். மேலும், உடற்பயிச்சிகளைக் கூட இது வேடிக்கையானதாக மாற்றும்’ என்று கார்மின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வெனு மற்றும் விவோஆக்டிவ் 4 ஆகிய இரண்டுமே நவீன ஸ்மார்ட்வாட்சுகள் ஆகும். சுவாசம், தூக்கம், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் நீர் அளவு, மன அழுத்த அளவு உள்ளிட்டவை மிகச்சரியான அளவில் கணிக்கப்படுகிறது. 

இதுதவிர, தினமும் அணியக்கூடியது இந்த ஸ்மார்ட்வாட்களின் பேண்டுகளை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். சூரிய ஒளியிலும்  நன்கு தெரியக்கூடிய ‘கார்மின் குரோமா டிஸ்ப்ளே’ தொழில்நுட்பம் திரைக்கு வலுசேர்க்கிறது. 

அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய வெனு ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.37,490.விவோஆக்டிவ் 4 ஜி.பி.எஸ் ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.32,590ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்சுகள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் கடைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here