நான் பிரதமராக இருந்த போது ஊடகங்களை பார்த்து பயப்படவில்லை . ஊடகங்களுக்கு பயந்து பேசாமல் இருந்த பிரதமர் நான் இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் அமைதியான பிரதமர் அவர் பேசியதில்லை என்று பாஜக கூறியது . இதற்கு பதிலடியாக

நான் அமைதியான பிரதமர் என்று என்னை கூறினாலும் ஊடகங்களிடம் பேச நான் ஒருபோதும் அஞ்சியதில்லை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். நான் எழுதிய ‘சேஞ்சிங் இந்தியா’ புத்தகம் அதைப் பற்றி பேசும் என நான் நினைக்கிறேன். நான் பிரதமராக இருந்த போது ஊடகங்களை பார்த்து பயப்படவில்லை . ஊடகங்களுக்கு பயந்து பேசாமல் இருந்த பிரதமர் நான் இல்லை . ஒவ்வொரு முறை வெளிநாட்டு சென்றுவிட்டு திரும்பும்போதும், செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றேன். 

ரிசர்வ் வங்கி வலிமையுடனும், சுதந்திரமாகவும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதுபோன்று செயல்பட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் வழிகளை கண்டறியும் என நான் வேண்டும் என நம்பிக்கையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் பிரதமராகியது விபத்து என்கிறார்கள். நான் அதேபோன்ற விபத்தால் தான் மத்திய நிதியமைச்சராகவும் மாறினேன்” என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையேயான கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில், அவ்வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சக்திகாந்த தாஸ் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here