அமைச்சர்கள் பட்டம் பெற்றதற்கு ஆதாரங்களை காட்ட முடியாத தேசத்தில் ஏழைகள் எதைக்காட்டுவார்கள் ? பாசிச பாஜகவை கிழித்து தொங்கவிட்ட எம்பி (முழுவிவரம்)

Full text of TMC MP Mahua Moitra's first ever speech in the Parliament.

0
1126

How TMC MP Mahua Moitra Tore Into the Government in Her Maiden Parliamentary Speech

She argued that all the signs of ‘early fascism’ could be witnessed in the country today.

திரிணாமுல் காங்கிரஸின் புதிய சட்டமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையினால் டிவிட்டரில் டிரெண்டானார்.  அமெரிக்காவில் ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் குறியீடுகள் குறித்த போஸ்டர் உள்ளது. அதில் சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் இந்தியாவில் காணப்படுகிறது என்று பேசினார். 

இந்த அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை மதிக்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியை ஏற்றுக் கொண்ட அரசு மக்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். எதிர்கருத்துகளை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கான நாடாளுமன்றம் இது.  அதனை மீட்டெடுக்கவே நான் பேசுகிறேன் என்று பேசினார். 

நாடாளுமன்றத்துக்கு வெளியே சிலையாக இருக்கும் மௌலான அசாத்தின் பொன்மொழிகளைக் கூறி தனது உரையைத் தொடங்கியவர் பாஜக அரசை சராமாரியாக விளாசினார். 

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்றே நாம் பதவியேற்று கொள்கிறோம். ஆனால் தற்போது அந்த அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது. நீங்கள் (பாஜக) இல்லை என்று கூறுவீர்கள்.  இங்கு அச்சீ தின் (acche din) இருக்கிறது என்றும் இந்த அரசாங்கம் கட்டியெழுப்ப விரும்பும் இந்திய பேரரசின் மீது சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது என்றும் கூறுவீர்கள் . ஆனால், நீங்கள் சில அறிகுறிகளைக் பார்க்கவில்லை. நீங்கள் கண்களைத் திறந்தால் மட்டுமே அந்த அறிகுறிகளை பார்ப்பீர்கள். இந்த நாடு எல்லா இடங்களிலும் சிதைந்து போயுள்ளது. இந்த தேசம் பாசிசத்தை நோக்கி எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை 7 குறியீடுகள் வெளிப்படுத்துகின்றன. 

முதல் அறிகுறி – தேசியவாதம்  தேசியவாதம் கட்டமைக்கப்பட்டு 

கொண்டிருக்கிறது. இதுதான் பாசிசத்துக்கான முதல்படி. இது மேலோட்டமானது. இது இனவெறி கொண்டது . இது குறுகியது. மக்களைப் பிரிப்பதை குறிக்கோளாக கொண்டது. தேசியவாதம் மக்களை ஒன்றிணைக்காது. இந்திய குடிமக்கள் அவர்களுடைய வீட்டில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று இந்த அரசு கூறுகிறது. 50 வருடங்களாக இந்த நாட்டில் வாழும் மக்களிடம் இந்தியர் என்று நிரூபிக்க காகிதங்களைக் (ஆதாரங்களை) கொண்டு வா என்கிறது. நம்நாட்டில்தான் நம்முடைய அமைச்சர்களால் தாங்கள் என்ன பட்டபடிப்பு படித்திருக்கிறோம் என்று கூற தங்களது சான்றிதழ்களையே காண்பிக்க முடிவதில்லையே. அப்புறம் எப்படி இந்த நாட்டில் வாழும் ஏழை மக்கள் தாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை எவ்வாறு காகிதம் (ஆதாரம்) கொண்டு நிரூபிக்க முடியும்? 

கோஷங்களும், சின்னங்களும் மதத்தை சோதிக்க பயன்படுத்தப்படுகின்றன. தேசபற்றுடையவர் என்பதை நிரூபிக்க எந்த ஒரு கோஷமும், சின்னமும் கிடையாது . 

2 வது அறிகுறி – மனித உரிமைகள் தகர்க்கப்படுகிறது; நிர்வாகத்தில் ஊடுருவி வருகிறது . கும்பல் படுகொலைகள்

2014 க்கும் 2019க்கும் இடையில் வெறுப்பால் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 

10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது ஒரு ஸ்டார்ட் அப்  (start-up) நிறுவனத்தின் மதிப்பீடு போல் இருக்கிறது. இந்த நாட்டில் சில அமைப்புகள் உட்கார்ந்துக் கொண்டு வெறுப்பின் பெயரால் நடக்கும் குற்றங்களை செயல்படுத்தி வருகிறது. குற்றங்களை அதிகரித்தும் வருகிறது. இந்திய குடிமக்களை அடித்துக் கொல்வது கண்டிக்கதக்கது . ராஜஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லுகான் முதல் நேற்று அடித்து கொல்லப்பட்ட அன்சாரி வரைக்கும் இதுதான் நடந்து வருகிறது . இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. 

3 வது அறிகுறி – ஊடகங்களை மிரட்டி அடிபணியவைத்திருப்பது 

இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய 5 ஊடகங்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது, அல்லது இந்த நாட்டின் ஒரு மனிதருக்கு மறைமுகமாக அவர்கள் அடிபணிகிறார்கள்.  தொலைக்காட்சிகள் பெரும்பாலான நேரங்களில் ஆளும் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது . அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் பற்றி செய்திகளே கிடைப்பது இல்லை. ஒவ்வொரு ஊடகத்துக்கும், விளம்பரத்துக்காக  அரசு எவ்வளவு செலவழிக்கிறது என்று அரசு வெளிப்படையாக கூறட்டுமே.  தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் 120 பேரை வேலைக்கு அமர்த்தி தொலைக்காட்சிகள் அரசுக்கு எதிரான செய்திகள் போடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 

போலி (பொய்) செய்திகள் விதிமுறை ஆகிவிட்டது. நடந்து முடிந்தத் தேர்தல் விவசாயிகள் பிரச்சனையை முன்வைத்து நடத்தப்படவில்லை. வேலையின்மையை வைத்து நடத்தப்படவில்லை. வாட்ஸ் ஆப்பில் பொய் செய்திகள் அனுப்பப்பட்டு அதன் பேரில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.  பொய்யான செய்திகள் மூலமாக மக்களின் மனது கையாளப்பட்டது. 

பொய்யை, திரும்ப திரும்ப கூறி அதை உண்மையாக்கி இருக்கிறார்கள் இந்த பாஜகவினர். இதுதான் நாசி (Nazi Leader) தலைவர் கோயபல்ஸின் கோட்பாடு. 

சாதரண மனிதர்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். 1999லிருந்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் 36 வாரிசுகளை உட்கார்த்தியிருக்கிறது . ஆனால் நீங்கள் (பாஜக) 31 பேரை உட்கார்த்தியிருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை கூறுவது இந்திய தேசத்தின் மாண்பைக் குறைக்கிறது . காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் மேற்கு வங்கத்தில் கூட்டுறவு இயக்கம் சரியாக வேலை செய்யவில்லை என்கிறார். அவர் உண்மையை சரிபார்க்க வேண்டும். முர்சிதாபாத்தில் இருக்கும் பாகிரதி கூட்டுறவு இயக்கம் லாபத்தில் இயங்கி வருகிறது. இவ்வாறு கூறும் ஒவ்வொரு பொய்யும் இந்தியாவைச் சிதைக்கிறது. 

4 வது அறிகுறி – தேசபாதுகாப்பு – முகம் தெரியாத பூதங்கள் 

நாம் குழந்தைகளாக இருக்கும் போது எதையாவது செய்ய சொல்வார்கள் செய்யவில்லையென்றால் பூதம் வந்துவிடும் என அம்மா பயமுறுத்துவார். இப்போது இந்த தேசமே அடையாளம்தெரியாத சில பூதங்களால் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். தேசம் முழுவதும் ஒருவித அச்சநிலை நிலவுகிறது. ராணுவத்தினரின் வீரதீர செயல்களை தனி ஒரு மனிதர் உரிமை கொண்டாடுவது எப்படி சரியாகும்? ஒவ்வொரு நாளும் புதிய புதிய எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினரின் மரணம் என்பது 106% அதிகரித்துள்ளது.

5 வது அறிகுறி – இந்த நாட்டில் அரசும் மதமும் ஒன்றாகியுள்ளது 

நான் இது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை . குடியுரிமை திருத்த மசோதா மூலம் அவர்களின் குறி ஒன்றே ஒன்றுதான். சிறுபான்மையினரை நாட்டை விட்டு துரத்த வேண்டும். அவர்களை குறி வைத்தே இந்த மசோதா. பாஜக அமைச்சர்களுக்கு 2.77 ஏக்கர் நிலத்தின்மீது மட்டும்தான் குறி மீதமுள்ள இந்தியாவின் 812 மில்லியன் (80 கோடி) ஏக்கர் மீது அவர்களுக்கு எந்தவித நாட்டமும் இல்லை.  

6 வது அறிகுறி – அறிவுஜீவிகள் இங்கு அவமதிப்பு செய்யப்படுகிறார்கள், இது மிகவும் ஆபத்தானது  

அறிவுஜீவிகள் இங்கு கருத்துக் கூறுவதற்கு தடை இருக்கிறது . அனைத்துக் குரல்களும் அடக்கப்படுகிறது. தராளமய கல்விக்கு அளிக்கும் நிதி குறைக்கப்படுகிறது.  அறிவியல் சார்ந்த கருத்து கூறுபவர்களுக்கும் இடமில்லை.  இந்தியாவில் தற்போது நடப்பவை எல்லாம் நம்மை இருண்ட காலத்துக்கு கொண்டுச் செல்கிறது. பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு கொள்கைகள் சிதைக்கப்படுகிறது. நீங்கள் கேள்வி கேட்பதை விரும்புவதில்லை ; எதிர்ப்பை அடக்குகிறீர்கள் . கருத்து வேறுபாடு என்பது இந்தியாவில் ஒருங்கிணைந்ததாகும். நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்களை சிதைக்க முடியாது. 

7 வது அறிகுறி – மோசடி நடக்கும் தேர்தல்கள் ; தேர்தல் அமைப்பில் இருந்த சுதந்திரம் நசுக்கப்படுதல் 

தேர்தல் அதிகாரியை பயன்படுத்தி மாநிலத்தின் அதிகாரிகளை மாற்றினீர்கள். ரூ60000 கோடி இந்தத் தேர்தலுக்காக செலவிடப்படிருக்கிறது. அதில் 50 சதவீதத்தை ஒரே ஒரு கட்சி செலவிட்டிருக்கிறது . அதாவது பாஜக மட்டும் ரூ27000 கோடி செலவிட்டிருக்கிறது . 

2017 ஆம் ஆண்டு United States Holocaust Memorial Museum – த்தின் ஹாலில் பாசிசத்தின் அறிகுறிகள் என்று எழுதப்பட்ட ஒரு பட்டியலைத் தொங்கவிட்டிருந்தனர்.  நான் கூறிய அறிகுறிகள் அனைத்தும் அந்தப் பட்டியலில் இருந்தது. இந்தியாவில் பாசிசத்தின் ஆபத்துகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது .அது பதவியில் இருக்கிறது நாம் அதனை எதிர்க்க வேண்டும். 17 வது மக்களவை உறுப்பினர்கள் அனைவரும்  எந்தப் பக்கம் நிற்க போகிறோம் என்று முடிவு செய்ய வேண்டும். 

வரலாற்றின் எந்த பக்கத்தில் இருக்க விரும்புகிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பை ஆதரிக்கும் பக்கமா… அல்லது அது  சவக்குழிக்குள் இருக்கும் பக்கமா என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும் என்று மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த 42 வயது நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பாஜக அரசை சராமாரியாக விளாசினார்.  

பாஜகவுக்கு கிடைத்த பெரும்பான்மையை நான் மதிக்கிறேன் ஆனால் அவர்களுக்கும் முன்னால் யாரும் இல்லை அவர்களுக்கு பிறகும் யாரும் இல்லை என்ற பாஜகவின் கொள்கையை வன்மையாக எதிர்க்கிறேன் என்றார். இவர் அமெரிக்காவின் முன்னாள் முதலீட்டு வங்கியாளர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here