அமேதியில் ‘தொழுகைக்கு அழைப்பு’ விடுத்தபோது 2 நிமிடங்கள் பிரச்சாரத்தை நிறுத்திய ராகுல் காந்தி (video)

0
306

 ராகுல் காந்தி அமேதியில் நடந்த  பிரச்சாரக் கூட்டத்தில்  பேசிக் கொண்டிருந்தபோது மசூதியில் தொழுகைக்காக அழைப்பு விடுத்தனர். அதனால்  1.35 நிமிடங்கள் அமைதியாக நிற்கும் வீடியோவை  ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது  

மக்களவைத் தேர்தலுக்காக ராகுல் காந்தி அமேதியிலும் ,  சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அமேதியில் மசூதி அருகே பிரச்சாரக் கூட்டத்தில்  பேசிக் கொண்டிருக்கும் போது தொழுகைக்காக அழைப்பு விடுத்தனர் அதைத் தொடர்ந்து தனது பேச்சை நிறுத்திவிட்டு 1.35 நிமிடங்கள் அமைதியாக நின்றார் ராகுல் காந்தி.   பின்பு தனது பிரச்சாரப் பேச்சை தொடர்ந்தார். 

 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியிலும், அமேதியிலும் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்ட போது மோடியை தாக்கி பேசினார். பிரதமர் மோடி திருடர் என்றும்  தொழிற்சாலைகளில் உள்ளூர்வாசிகளுக்கு  இருந்த வேலைவாய்ப்புகளை மோடி பறித்துவிட்டார் என்றும் கூறினார்.   

மோடி கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று பொய் கூறி,  மக்களை நீண்ட வரிசையில் நாள்கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்க வைத்தார். அவ்வாறு மக்களிடமிருந்து  பிடுங்கிய பணத்தை  அனில் அம்பானி போன்றத் திருடர் கையில் கொடுத்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார்.  

indianexpress.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here