அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது பிரைம் வீடியோ மொபைல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சேவை ஒருவர் பயன்படுத்தும் வகையிலான மொபைல்-ஒன்லி சலுகை ஆகும். புதிய சேவை இந்திய சந்தையில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கும் புதிய அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவை எஸ்டி தர வீடியோ ஸ்டிரீமிங் வசதியை வழங்குகிறது.
இந்த சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 89 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமேசான் புது சலுகை குறைந்த விலையில் கிடைப்பதோடு, இதனை செயல்படுத்த அமேசான் நிறுவனம் ஏர்டெலுடன் இணைந்துள்ளது.
அதன்படி ஏர்டெல் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் மூலம் ஏர்டெல் தேங்ஸ் செயலி வாயிலாக அமேசானில் சைன்-இன் செய்தால் 30 நாட்களுக்கு இலவசமாக பிரைம் வீடியோ மொபைல் சேவையை பெற முடியும்.
இலவச சந்தா நிறைவுற்றதும் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனிற்கு ரூ. 89 செலித்த வேண்டும். பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் ரூ. 89 விலை சலுகை 28 நாட்கள்வேலிடிட்டி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்குகிறது.
அமேசானின் புதிய சலுகை நெட்ப்ளிக்ஸ் மொபைல் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் மொபைல் சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 199 என்பது குறிப்பிடத் தக்கது.