அமேசான் நிறுவனம் ’கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனை: 50% வரை அசத்தல் தள்ளுபடி

Amazon will host its Great Indian Festival sale on 17 October in India. The Prime members will get early access to the sale on 16 October. The festival sale is expected to last a month long.

0
87

அமேசான் நிறுவனம் ’கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனைக்கான அறிவிப்பை கடந்த மாதம் அறிவித்தது. அக்டோபர் 16 ஆம் தேதி அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கும், அக்டோபர் 17ஆம் தேதி சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் தொடங்க உள்ளது.

அமேசான் தனது சொந்ததயாரிப்புகளான அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், கிண்டில்இ-ரீடர் மற்றும் பலவற்றிற்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறது.

இரண்டாவது ஜெனரேஷனான அமேசான் எக்கோ டாட் ஸ்பீக்கர் அசல் விலையான ரூ. 4,499-லிருந்து, ரூ.2,250 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.2,499விலையில் கிடைக்கும்.

அமேசானின் நான்காவது ஜெனரேஷனான எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின்போது விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும், அமேசான் புதிய எக்கோ டாட்(4 வது ஜெனரேஷனுக்கு) எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை.

அதேபோல், அமேசான் ஃபயர் ஸ்டிக் ரூ.50-க்கும் குறைவான தள்ளுபடி விலையில் விற்கப்படும். அசல் விலையான ரூ.3,999-லிருந்து குறைந்து, குறைந்தபட்சம் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.3,000 என்ற விலையில் கிடைக்கும். அதேபோல், ஃபயர்ஸ்டிக் 4கே, ரூ.3,599 என்ற விலையில் கிடைக்கும். எக்கோ ஷோவில் குறைந்த பட்சம் ரூ.2,400 தள்ளுபடி செய்யப்படும்.

அசல் விலையான அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் ரூ.9,999-லிருந்து ரூ.3,000தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.6,999 கிடைக்கும். மேலும், 6 அங்குல கிண்டில்(10 வது ஜெனரேஷன்) அதன் அசல் விலையான ரூ.7,999-லிருந்து ரூ.6,499ஆக கிடைக்கும்.

இரண்டாம் ஜன்ரேஷனான அமேசான் எக்கோ பிளஸ் ஸ்பீக்கர் அதன் அசல் விலையான ரூ.14,999-லிருந்து ரூ.7,499 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.7,500ல் கிடைக்கும். மேலும், அமேசான் எக்கோஸ் டுடியோவில் குறிப்பிடத்தக்க ரூ.18,999 விலையிலிருந்து ரூ.4,000தள்ளுபடி கிடைக்கும்.

மற்ற சலுகைகளில், அமேசான் எக்கோ டாட்(மூன்றாம் ஜெனரேஷன்), விப்ரோஸ் மார்ட் எல்.இ.டி பல்ப் மற்றும் அமேசான் ஃப்ளெக்ஸ் ஸ்மார்ட் பிளக் சேர்த்து ரூ.7,597 என்ற நிலையிலிருந்து ரூ.4,299 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.3,298-க்கு வழங்கப்படுகிறது.

விப்ரோ ஸ்மார்ட் எல்.இ.டிபல்ப் அசல் விலையான ரூ.6,598-லிருந்து ரூ.4,299தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.2,299 விலையில் கிடைக்கின்றது.

வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட்டும் அதே நேரத்தில் ’பிக் பில்லியன் டே’ விற்பனையை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here