அமேசான் நிறுவனத்தின் ‘சம்மர் சேல்’ஆரம்பமாகிறது. மே 4 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை நடக்கும் இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி விற்பனை ஒரு நாளைக்கு முன்னரே கிடைக்கும். ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேல், மே 3 ஆம் தேதி, மதியம் 12 மணிக்கே ஆரம்பிக்கும். நாளை(வெள்ளிக்கிழமை) இந்த சேல் ஆரம்பமாகவுள்ள நிலையில், அமேசான் நிறுவனம் ஆஃபர் எந்தெந்த ஸ்மார்ட் போன்களுக்கு வழங்கப்படும்என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது. 

ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை இந்த சேலில், 40% வரை தள்ளுபடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சில போன்களுக்கு ‘இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர்’ கொடுக்கப்பட உள்ளதாக அமேசான் கூறியுள்ளது. 

இந்த சம்மர் சேலின் போது, ஐபோன் X போன் 69,999 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் எம்.ஆர்.பி விலை 91,900 ரூபாயாகும். 9 மாதங்களுக்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதியும் இந்த போன் வாங்கினால் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி S9 39,900 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் எம்.ஆர்.பி விலை ரூ.62,500 ஆகும்.

அதேபோல ஒன்பிளஸ் 6T போன் 32,999 ரூபாய்க்கு கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.41,999). இந்த போன் மிகக் குறைவாகவே கையிருப்பு இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவத்துள்ளது. 

ஹானர் வியூ 20 (6ஜிபி + 128ஜிபி), ரூ.37,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.42,999). இதனுடன் 5000 ரூபாய்க்கு அமேசான் கேஷ்-பேக் ஆஃபரும் கிடைக்கும். 

சாம்சங் கேலக்ஸி M20 முதன்முறையாக தள்ளுபடி விலையில் இந்த சம்மர் சேல் மூலம் கிடைக்கும். ரூ.10,990-க்கு கிடைக்கும் M20, தள்ளுபடி பெற்று 9,990 ரூபாக்கு கிடைக்கும். 

சில பட்ஜெட் போன்களுக்கு இந்த சம்மர் சேல் மூலம் ஆஃபர்கள் கிடைக்க உள்ளது. சியோமி எம்ஐ A2, ரூ.10,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.17,499). ரெட்மி 6A, ரூ.5,999 கிடைக்கும். இதற்கு 500 ரூபாய் அமேசான் கேஷ்-பேக் ஆஃபரும் கிடைக்கும். ரெட்மி 6 ப்ரோ, 9999 ரூபாய்க்கு கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.13,499).

மேலும் ஹானர் ப்ளே போன் ரூ.13,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை ரூ.21,999). ஹூவேய் Y9 ரூ.13,990 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை ரூ.18,990). ஹானர் 8X, ரூ.12,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை 17,999).

சாம்சங் கேலக்ஸி A50 போன் ரூ.19,990 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை 21,000 ரூபாய் ஆகும்)

இதைத் தவிர எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி, கேஷ்-பேக் தள்ளுபடி, எஸ்.பி.ஐ கார்டு மூலம் வாங்கினால் 10 சதவிகித உடனடி தள்ளுபடிகளைப் பெறலாம். 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here