அமேசான் காடுகள் சட்ட விரோதமாக அதிவேகமாக அழிக்கப்படுவதற்கு காரணம் பிரேசில் அதிபர் போல்சோனாரோ

The latest Brazilian government figures show that deforestation in the Amazon rose by almost 30%.

0
2053

கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடம்  பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளை அதிக அளவில் அழித்து வருகிறார்கள் என்று அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது .  

ஆகஸ்ட் 2018 லிருந்து ஜூலை 2019 வரையில் 9762 சதுர கிலோமீட்டர் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது . 

இது கடந்த ஆண்டைவிட 29.5 சதவீதம் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வேகமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டதில்லை . 

காடுகளை அழிக்க காரணமாக இருக்கும் சட்ட விரோத பதிவு, கனிமங்களை எடுத்தல், நில அபகரிப்பு போன்றவற்றை தடுக்க புதிய திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ரிக்கார்டோ சல்லேஸ் கூறியுள்ளார். 

காடுகளை அழிப்பதை நிறுத்தும் வழிகளை பற்றி விவாதிக்க அமேசான் பிராந்தியத்தில் உள்ள ஆளுநர்களை  அமைச்சகம் சந்திக்க உள்ளது 

அமேசான் காடுகள் சட்டவிரோதமாக  அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோவின் தவறான சுற்றுச்சூழல் கொள்கைகளே என்று சுற்றுச்சூழல் நலனுக்காக வேலை செய்யும் அமைப்புகளும், என் ஜி ஓக்களும்  குற்றச்சாட்டு வைக்கின்றன.  

ஒவ்வொரு இன்ச் அமேசான் காடு அழிக்கப்படுவதற்கான மூல காரணம் போல்சோனாரோவின் அரசுதான் . இந்த அரசுதான் அமேசான் காடுகளின் எதிரி என்று கிரீன் பீஸ் அமைப்பின் பொதுக் கொள்கை ஒருங்கிணைப்பாளரான மார்சியோ அஸ்டிரினி கூறுகிறார். 

 வலது சாரி கொள்கைக் கொண்ட தலைவர் ஜனவரியில் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து அமேசான் காடுகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகமாகிவிட்டது. 

பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக அமேசான் மழைக்காடுகளில் இருக்கும் கனிம இயற்கை இருப்புகளுக்கான பாதுகாப்புகளை  , பூர்வீக நிலங்களுக்கான பாதுகாப்புகளை தளர்த்திவிட்டார் பிரேசில் அதிபர் போல்சோனாரோ . 

அமேசான் காடுகளை அழிப்பதற்கு ஒரு காரணமாக பிரேசிலில் மாட்டிறைச்சியின் விலை அதிகரித்தது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் கால்நடை வளர்ப்பிற்காக அமேசான் காடுகளில் நில அபகரிகரிப்பு  அதிகமாகிவிட்டது. 

அமேசான் உலகிலேயே மிகப் பெரிய மழைக்காடு. அது உறிஞ்சும் கார்பண்டை ஆக்சைடின் அளவு காரணமாக காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியமாகக் கருதப்படுகிறது

2019 ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அமேசான் காடுகள் எரிந்து கொண்டிருந்தது உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 https://thewire.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here