ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனத்தின் இயக்குனராக பெப்ஸியின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த அவர், இங்கு பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பையும் நிறைவு செய்திருக்கிறார்.

உலகப் பிரபலம் பெற்ற குளிர்பான நிறுவனமான பெப்ஸியின் தலைவர் பொறுப்பில் இந்திரா நூயி 2006 முதல் 2018 வரை இருந்தார்.

அமேசான் தனது நிர்வாக குழுவில் 2-வது பெண்ணாக நூயியை சமீபத்தில் சேர்த்துள்ளது. முன்னதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரோசாலிந்த்த ப்ரூவரை தனது இயக்குனராக அமேசான் நியமித்தது.

அமேசானை பொறுத்தவரையில் நிர்வாக குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நூயி, ப்ரூவர், ஜேமி கார்லிக், ஜூடித் மெக்ராத், பேட்ரிகா ஸ்டோன்ஸ்ஃபைர் ஆகிய 5 பேர் பெண்கள் இருக்கிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here