அமேசான் அலெக்சாவில் விரைவில் பிரபல நடிகரின் குரல்

Amazon Alexa on Monday announced a partnership with Bollywood megastar Amitabh Bachchan to create a unique voice experience for its Indian fans.

0
113

அமேசான் இந்தியா, அமிதாப் பச்சனுடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதாக இன்று(திங்கள்கிழமை) அறிவித்துள்ளது.

இதன்மூலம், அமிதாப் பச்சன் தனது இந்திய ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான குரல் அனுபவத்தை உருவாக்க உள்ளார்.

Amitabh-Bachchan-to-be-Voice-of-Amazon-Alexa-in-India-f

அதன்படி அமிதாப் பச்சன் குரல் அலெக்சா சேவையில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கென அமிதாப் பச்சன் அமேசான்நிறுவனத்துடன் பணியாற்றுகிறார். அமிதாப் பச்சன் குரல் மட்டுமின்றி அவரது ஜோக்குகள், அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை மற்றும் பேச்சு மொழி உள்ளிட்டவை அலெக்சாவில் வழங்கப்படஇருக்கிறது. 

பயனர்கள் அலெக்சாவிடம் ஏதேனும் கேள்விகேட்டு அமிதாப் பச்சன் குரலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம். இந்த அம்சம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இது அமேசான் எக்கோ, ஃபயர் டிவிஸ்டிக், அலெக்சா செயலி மற்றும் இதர மூன்றாம் தரப்பு சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.

இது குறித்துப் பேசிய அமிதாப் பச்சன் “தொழில்நுட்பம் எப்போதுமே புதிய வடிவங்களுக்கு ஏற்ப என்னை இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பளித்து வருகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாட்காஸ்ட்களில் இருந்தாலும், இப்போது, அமேசான் மற்றும் அலெக்ஸாவுடன் இணைந்து இந்த குரல் அனுபவத்தை உருவாக்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த குரல் தொழில்நுட்பத்துடன், எனது பார்வையாளர்களுடனும் நலம் விரும்பிகளுடனும் நான் இன்னும் இணக்கமாக இருக்க நாங்கள் இதை உருவாக்கி வருகிறோம் ”என்று அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் இணைவது குறித்து அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here