அமேசான் நிறுவனம் இன்று(திங்கட்கிழமை) முதல் ‘அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்’ – டில் சலுகை விலையில் மொபைல்போன்கள் விற்பனை செய்கிறது. இந்த விற்பனை ஜூன் 13ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில் ஒன்ப்ளஸ் 6T, ஐபோன் X, சாம்சங் கெலக்சி M30, ஹவாய் P30 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. சாம்சங் M20, ஹானர் 9N, ரெட்மீ 7 என இன்னும் பல ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் சலுகை விலையில் கிடைக்கும்.

இந்த ‘அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்’ – டில்  ரூ.32,999க்கு விற்பனையாகும் 8ஜி,பி ரேம், 128ஜி.பி மெமரி கொண்ட ஒன்ப்ளஸ் 6T-யை ரூ.27,999க்கு வாங்கிக்கொள்ளலாம்.  மேலும் சாம்சங் கெலக்சி M30-யும் அதிரடி சலுகையை பெற்றுள்ளது. அதன்படி,  4ஜி,பி ரேம், 64ஜி.பி மெமரி  ஸ்மார்ட்போனின் விலை, ரூ.14,990 ஆகும். இதன் மற்றொரு வெரியண்ட் 6ஜி.பி ரேம், 128ஜி.பி மெமரியுடன் வரும் ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990 ஆகும். 

மேலும்  ‘அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்’ – டில்  அதிக அளவிலான பட்ஜெட் போன்கள் சலுகை விலையில் கிடைக்கவுள்ளது. அந்த வரிசையில், சாம்சங் M20, ஹானர் 9N, விவோ Y91i, எம் ஐ A2 4GB, ரெட்மீ 7, ஓப்போ A5 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனையாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஐபோன் X, ஹவாய் P30 Pro, விவோ நெக்ஸ், ஒப்போ R17, கேலக்சி நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்களும் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கவுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மொபைல் சாதனங்கள், மொபைல் கவர்கள் மற்றும் பல பொருட்கள் இந்த விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here