உலகம் முழுக்க ஆப்பிள் சாதனங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான உரிமையை அமேசான் பெற்று இருக்கிறது. #applenews #Amazon

அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தம் மூலம் உலகம் முழுக்க ஆப்பிள் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை அமேசான் பெற்று இருக்கிறது.

விரைவில் தனது வலைதளத்தில் ஆப்பிள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இருப்பதை அமேசான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. 

அந்த வகையில் அமேசான் வலைதளத்தில் புத்தம் புது ஐபேட் ப்ரோ, ஐபோன் XR, ஐபோன் XS, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும் ஆப்பிள் பீட்ஸ் ஹெட்போன் உள்ளிட்டவை விரைவில் விற்பனை செய்யப்படும். 

அமேசான் மற்றும் ஆப்பிள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருந்தும்.

அமேசான் தளத்தில் ஆப்பிள் மற்றும் பீட்ஸ் பொருட்களை ஆப்பிள் அதிகாரிப்பூர்வ விற்பனையாளர்களால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். அமேசான் வலைதளத்தில் சில மேக்புக் லேப்டாப்கள், பீட்ஸ் ஹெட்போன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு ஆப்பிள் பொருட்களை ஓரளவு தரமான விலையில் அமேசான் வழங்க முடியும்.

புதிய ஒப்பந்தத்தில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் விற்பனை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

courtesy:.maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here