அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் ஆன் – லைன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் தொழில் தொடங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டது. அப்போது ரிசர்வ் வங்கி பல நிபந்தனைகளை விதித்தது. அதில் பொருட்கள் வாங்குபவர்களுடைய விவரங்கள் மற்றும் அவர்கள் வாங்கக்கூடிய பொருட்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை இந்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த நிபந்தனைகட்டு உட்பட்டு அமேசானில் எந்த பொருள் வாங்கினாலும் அது சம்பந்தமான தகவல்கள் மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்புகளுக்கு செல்வதாக தெரியவந்துள்ளது.

நமக்கு தெரியாமலேயே அரசு நிறுவனங்கள் நம்மை கண்காணிக்கும் நிலைமையை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட நபரின் ரகசியங்கள் அரசுக்கு செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு தனிப்பட்ட நபர் என்ன பொருள் வாங்குகிறார், எவ்வளவு விலைக்கு பொருளை வாங்குகிறார் போன்ற விவரங்கள் அரசு ஏஜென்சிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திடம் கேட்டபோது ஒவ்வொரு நாட்டிலும் தொழில் தொடங்கும் போது அந்த நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளை எங்கள் நிறுவனம் பின்பற்றுகிறது. அதன் அடிப்படையிலேயே எங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி நாங்கள் செயல்படுகிறோம் என்ற பதில் கூறப்பட்டது.

பல வருடங்கள் ஆன்லைன் வர்த்தக துறையில் உள்ள நிபுணர் ஒருவரைக் கேட்டபோது ”எங்களிடம் அரசு நிறுவனங்கள் பல்வேறு தகவல்களை கேட்டு பெறுகின்றன. நாட்டின் சட்ட திட்டங்கள் படி அவற்றை வழங்க வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கிறது என்று கூறினார்.
மேலும் ஒரு நபருடைய வரவு செலவு விவரங்களையும், மற்ற நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையிலும் சைபர் துறையில் தவறுகள் நடக்காமல் தடுக்கும் வகையிலும் தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள்” என்றார்.

(இச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here