அமேசானின் ஃப்ரீடம் சேல்

0
348

லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Freedom Sale என்ற பெயரில் அமேசான் ஆன்லைன் ஆஃபர்களை வழங்கவுள்ளது. ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படவுள்ளன. 

அமேசானின் இந்த விற்பனை ஆகஸ்ட் 8-ம் தேதி நள்ளிரவில் தொடங்கி 11-ம்தேதி வரை நடைபெறும். நீங்கள் Prime உறுப்பினர் என்றால் 7-ம்தேதி மதியமே இந்த ஆஃபர்களை பெற்றுக் கொள்ள முடியும். 

Prime உறுப்பினராக இருப்பதன் பலன் என்னவென்றால் சில பொருட்களின் டீல் குறைந்த காலத்திற்கே இருக்கும். இதனால் முன்னரே Access கிடைக்கும்போது அந்த பொருள் காலியாவதற்கு முன்பாக நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். Freedom sale டீசரை அமேசான் தனது இணைய தளத்தில் வெளியிட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளத. 

ஸ்மார்ட் போன்களின் விலையை 40 சதவீதம் வரைக்கும் குறைத்து வழங்கப்போவதாக அமேசான் கூறியுள்ளது. இந்த ரகங்களில் OnePlus 7 Pro மொபைல் விலை வெகுவாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று Galaxy M40 போன் சமீபத்தில் வெளிவந்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகளவு பூர்த்தி செய்தது. 32 மெகா பிக்ஸ்ல், 6 ஜிபி ரேம் கொண்ட இந்த மொபைல் தற்போது ரூ. 19,990-க்கு விற்பனையாகிறது. இதன் விலையும் குறையுமா என்ற எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்த எதிர்பார்ப்பை அமேசான் நிறைவேற்றும் என நம்பலாம். 

இதேபோன்று லேட்டஸ்ட் மொபைல்களான  Samsung M30, Samsung M20, Redmi Y3 ₹ 9,809, Redmi 

7 ₹ 7,996, Nokia 6.1 Plus, Realme U1 ஆகியவற்றின் விலையும் குறைக்கப்படலாம். 

மிக அதிக விலைக்கு விற்பனையாகி வரும் Oppo Reno, Galaxy Note 9 ( ₹ 60,990) , Oppo F11 Pro, Vivo V15 ஆகியவற்றை எக்சேஞ் முறையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த Freedom Sale-ல் Exchange தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே மொபைல் பிரியர்கள் கொஞ்சம் 7-ம்தேதி வரை பொறுமையாக இருந்து, அமேசான் ஆஃபர்களை பொறுத்து மொபைல்களை வாங்கலாம். இதேபோன்று ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப், ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன், ஏர்ஃபோன், ஸ்மார்ட் டிவி போன்ற டிஜிட்டல் பொருட்களை வாங்குவோரும் 7-ம்தேதி வரை பொறுத்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here