அமெரிக்க CIA உளவாளிகள் 17 பேர் கைது; சிலருக்கு தூக்கு தண்டனை : ஈரான் அதிரடி

0
327

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பில் பணிபுரியும் 17 உளவாளிகளை ஈரான் கைது செய்துள்ளது. மேலும் சிலருக்கு மரண தண்டனை விதித்துள்ளது என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலனாய்வு  அமைச்சகம் கொடுத்த தகவலின் படி சிஐஏ உளவு வளையத்தை உடைத்து சந்தேகத்துக்கு உரிய 17 நபர்களை கைது செய்துள்ளதாக கூறுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

“அடையாளம் காணப்பட்ட உளவாளிகள், பொருளாதார, அணுசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் மற்றும் இணைய பகுதிகளில் முக்கியமான  மற்றும் தனியார் துறை மையங்களில் பணியாற்றினர் அங்கு அவர்கள் இரகசிய தகவல்களை சேகரித்தனர்” என்று அரசு தொலைக்காட்சியில் வாசித்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் மாதத்தில் ஈரான் சிஐஏ  பெரிய இணைய உளவு வலையமைப்பை அம்பலப்படுத்தியதாகவும், இதன் விளைவாக பல அமெரிக்க உளவாளிகள் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது. 

தெஹ்ரானில் இருந்து வெளிவரும் Press TV 17 சிஐஏ அமெரிக்க உளவாளிகளைப் பிடித்தது பற்றிய டாக்குமெண்டரியை ஒளிபரப்பியுள்ளது. 

சிஐஏ ஈரானில் பல போலி நிறுவனங்களை ஆரம்பித்து அதில் வேலையில் சேரும் ஈரானைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க விசாவும், அமெரிக்காவில் வாழ வசதிகளையும் அளித்துள்ளது . வேலையில் சேருபவர்கள் ஈரான் பற்றிய தகவல்களை அமெரிக்க சிஐஏ க்கு அனுப்பும் உளவாளிகளாக செயல்பட்டு வந்தார்கள் என்று அந்த டாகுமெண்டரி கூறுகிறது . 

சிஐஏ உளவாளி ஒருவரை அந்த டாகுமெண்டரிக்காக பேட்டி எடுத்துள்ளனர்.  ஐக்கிய அரபு நாடுகளின் அமெரிக்க தூதரகத்தில் வேலையில் இருக்கும் ஸ்டீவ் என்பவர் நாட்டின் வணிகத்தை கண்காணிக்க தெஹ்ரானில் வியாபாரம் தொடங்க தனக்கு  பணம் கொடுத்ததாக அந்த சிஐஏ உளவாளி Press TV யிடம் கூறியுள்ளார். 

அவ்வாறு உளவு பார்க்க தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உளவு  பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக அந்த டாகுமெண்டரியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு உளவு பார்க்க நபர்களை தேர்த்ந்டுப்பது அறிவிக்கப்படாத போர் என்றும் Press TV கூறுகிறது . 

independent.co.uk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here