ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 2.3% பங்குகளை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமாக விஸ்டாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.11,367 கோடி ஆகும்.

கடந்த சில வாரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 3 மிகப்பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அவற்றில் பேஸ்புக் நிறுவனம் 9.9 % பங்குகள் ரூ.43534 கோடிக்கும், சில்வர் லேக் நிறுவனம் 1.5% பங்குகளை ரூ.5655 கோடிக்கும் வாங்கின.

இந்நிலையில், தற்போது, விஸ்டா நிறுவனம் 2.3 % பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம், ஜியோ நிறுவனம், ரூ.60596.37 கோடி முதலீடுகளை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here