அமெரிக்கநாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி கலவரம் செய்த சம்பவத்தின்எதிரொலியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் 2-வது முறையாக பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக 232 பேரில் 197 பேர் வாக்களித்தனர்.
கடந்த 6 ஆம் தேதி அதிபர் டிரம்ப் தனது யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டரில் தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியதன் காரணமாகவே நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு பெரும் கலவரம் நடந்தது. இதில் போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலகவேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர். இதற்காக டொனால்டு டிரம்பை பதவி நீக்கவகைசெய்யும் தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டன.
இதற்காக, பிரிதிநிதிகள் சபையில் டிரம்பிற்கு எதிராக பதவிநீக்க தீர்மானத்தை கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை ஜனநாயக கட்சிகள் மேற்கொண்டன.
இந்நிலையில், டிரம்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நடைபெற்றது.
பிரதிநிதிகள் சபையில் நேற்று கொண்டுவரப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானத்துக்கு அதிபர் டிரம்ப் சார்ந்துள்ள குடியுரசுக் கட்சியின் எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக 232பேரில்197 பேர் வாக்களித்தனர்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எம்.பி.க்களான அமி பேரா, ரோ கண்ணா, ராஜாகிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை.
பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பதவிநீக்கத் தீர்மானம் இனிமேல்செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். ஆனால்,செனட்சபை 19 ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, 20 ஆம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். ஆதலால், செனட் அவையில் இது விவாதிக்க வேண்டியது இருக்காது .
குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி கூறுகையில் “ நம்முடைய தேசத்துக்கு எதிராகவே அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். ஆதலால், அதிபர் டிரம்ப் பதவி நீக்கம்செய்யப்பட வேண்டும்.
தேசத்துக்கு ஆபத்தானவர் டிரம்ப், அவர் வெளியேற்றப்பட வேண்டும். அதிபர் தேர்தல் நடந்ததில் இருந்து, நிலுவையில் உள்ள தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார், ஆனால், தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து பொய்களைக் கூறி நம்பவைத்தார். அரசியலமைப்புச் சட்டத்துக்குமாறாக அதிகாரிகளை நடக்குமாறு வற்புறுத்துகிறா. இறுதியாக அவரின் பேச்சால் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என அனைவரும் உணர்ந்தோம்.
ஆதலால், அதிபர் டிரம்ப் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். பிரதிநிதிகள் சபையிலிருந்து தீர்மானம்,செனட்அவைக்கு அனுப்பப்படும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபர் மீது 2-வது முறையாக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதுவே
முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.