அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

ஃபுளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பகுதியில் மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் என்னும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்நிலையில் புதன்கிழமையன்று, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் நிகோலஸ் கிரஸ் என்பவர், திடீரெனெ பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டார். இந்தத் தாக்குதலில் மாணவர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் கைது செய்தனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து புரோவர்ட் கவுண்ட்டி மேயர், நிகோலஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துக்கான சிகிச்சைபெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் அதிகம் நிகழ்கின்றன.

ஏப்ரல் 1999: கொலரடோ மாகாணத்திலுள்ள கோலம்பைன் பள்ளியில், எரிக் ஹாரிஸ் மற்றும் டெய்லன் என்னும் இரு மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் உட்பட 12 மாணவரகள் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த பள்ளியின் நூலக வளாகத்தில் இருவருமே தற்கொலை செய்துகொண்டனர்.

ஏப்ரல் 16; 2007: வெர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் சாங் ஹூய் சோ என்னும் 23 வயது நிரம்பிய மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்ளிட்ட 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன் பின்னர் சாங் ஹூய் சோ தற்கொலை செய்துகொண்டார்.

டிசம்பர் 14; 2012: கனெக்டிகட் பகுதியில் உள்ள சாண்டி ஹூக் துவக்கப்பள்ளி ஒன்றில், 20 வயது நிரம்பிய ஆடம் லான்ஸா என்னும் மாணவன், கண்மூடித்தனமாக சுட்டதில் 20 மாணவர்களும் 6 ஊழியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவன் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்