அமெரிக்க பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் விமானத்துறை பங்குகளை ஏன் விற்றார் தெரியுமா?

Warren Buffett told investors that Berkshire Hathaway has completely sold out of its airline stakes.

0
230

அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்சைர் ஹாத்வே நிறுவனம், அமெரிக்காவின் நான்காவது பெரிய விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டது. கொரோனாவின் காரணமாக அமெரிக்க விமான போக்குவரத்து தள்ளாட்டத்தில் இருக்கும் போது இந்த முடிவினை வாரன் பஃபெட் எடுத்துள்ளார். விமான துறையில் முதலீடு செய்ததன் மூலம் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பஃபெட் முன்பு தெரிவித்து இருந்தார்.

காணொளி மூலம் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “நமக்கு பெரிய நஷ்டம்தான். இருந்தபோதிலும் விமான துறையில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டேன். எதிர்காலத்தில் நமது பணம் முழுவதையும் அந்த துறை மென்று முழுங்கிவிடும் என நினைக்கிறேன். இப்படியான துறையில் முதலீடு செய்ய முடியாது,” என்று கூறினார்.

வாரன் பஃபெட்டின் நிறுவனம் 2016ஆம் ஆண்டிலிருந்துதான் விமான துறையில் முதலீடு செய்கிறது. பெர்சைர் ஹாத்வே நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 50 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here