அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்

0
93

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை ((John Bolton )) திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபிறகு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற 3ஆவது நபர் போல்டன் ஆவார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில், டிரம்புக்கு போல்டன் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஈரான் விவகாரத்தில் டிரம்ப் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு போல்டனே காரணமாவார். இதே தீவிர நிலைப்பாட்டை வடகொரியா, ஆப்கானிஸ்தான், ரஷியா தொடர்பான விவகாரங்களிலும் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் என டிரம்பிடம் போல்டன் வலியுறுத்தி வந்தார்.

இதனால்  டிரம்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், டிரம்பிற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுடனும் ((Mike Pompeo)) போல்டனுக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்தது. 

இதையடுத்து தனது பதவி விலகல் முடிவை டிரம்பிடம் போல்டன் கடந்த திங்கள்கிழமை இரவு தெரிவித்துள்ளார். அப்போது செவ்வாய்க்கிழமை காலையில் பேசிக் கொள்ளலாம் என்று போல்டனிடம் டிரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை விட்டு போல்டனை நீக்குவதாக டிரம்ப் செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, போல்டனுக்குப் பதிலாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு வடகொரியா விவகாரத்தை கையாளும் டிரம்பின் பிரதிநிதி ஸ்டீபன் பெய்கன் ((Stephen Biegun)) உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.