அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது போன்ற காரணங்களால் முன்னெப்போதும் இல்லாத அளவில் 73.34 ரூபாயாக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதனால், இந்தியப் பங்குச் சந்தையும் பெரும் சரிவை சந்தித்தது.

கடந்த சில மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.

இதுபோலவே அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. நேற்றைய நிலவரப்படி பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here