அமெரிக்க ஜனாதிபதி தேர்தர்: டிரம்ப் திடீர் பல்டி

Since Wednesday, Trump has railed on Twitter against mail-in voting, making claims of a “rigged election” and that votes, specifically in New York state, were “missing”.

0
101

அமெரிக்காவில் கொரோனா பேரிடருக்கு மத்தியில் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார். இதில், டிரம்ப்பின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே கருதப்படுகிறது.

கொரோனோ வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஜனாதிபதி டிரம்பும், ஜோ பிடனும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரசை கையாண்ட விதம், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, எதிர்கட்சி பிரசாரம் செய்து வருவதால் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றால் மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் நேற்று முன்தினம் டிரம்ப் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “

கொரோனா தொற்றின் காரணமாக தபால் ஒட்டு முறை அதிகமானால்  அதன் காரணமாக தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரவும் வாய்ப்புள்ளது.  அப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதுதான் வரலாற்றிலேயே மோசமான தேர்தலாக அமையும். அந்நிய நாடுகள் இந்த முறையின் காரணமாக தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புகள் அதிகம்.

அத்துடன்தபால் ஒட்டுமுறை இதற்கு முன்பு முயற்சி செய்யப்பட்ட இடங்களில் பெரும் கஷ்டமாக முடிந்துள்ளது. அப்படி நடந்தால் அமெரிக்காவிற்கும் அது மிக அவமானகரமானதாக அமையும். மக்கள் முறையாக, சரியாக மற்றும் பாதுகாப்பாக ஓட்டளிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க சட்டத்தின்படி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்ற போதிலும் டிரம்பின் இந்த திடீர் நிலைப்பாடு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் டிரம்பின் யோசனையை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், டிரம்ப் தனது கருத்தில் இருந்து நேற்று திடீரென பின்வாங்கினார். அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் விரும்புவதாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். ஆனால், ‘தேர்தல் முடிவுக்காக பல மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை,’ என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, தேர்தலை ஒத்திவைக்கக் கோரி டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவு குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

இது பற்றி அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் தாமதமாவதை நான் விரும்பவில்லை. திட்டமிட்டப்படி, தேர்தலை நடத்தவே விரும்புகிறேன். ஆனால், அதன் முடிவுகளுக்காக பல வாரங்கள், பல மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை. பின்னர், வாக்குப்பெட்டிகளை கண்டுபிடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி நடந்தால், தேர்தல் என்பதே அர்த்தமில்லாமல் போகும்,” என்றார்.

மேலும், தபால் வாக்குப்பதிவு பற்றிய செய்தியை தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் படியுங்கள். இது ஒரு பேரழிவு.

அவர்களிடம் இருந்து வெளிப்படையாக வந்த அந்த செய்தியை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அந்த செய்தி ஒரு பேரழிவை பற்றியது. ஜனாதிபதி தேர்தல் தேதியில் மாற்றத்தை நான் காண விரும்புகிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. அதே சமயம் நான் ஒரு வக்கிரமான தேர்தலை காண விரும்பவில்லை. அது நடந்தால் இந்த தேர்தல் வரலாற்றில் மிகவும் மோசமான தேர்தலாக இருக்கும் என  அவர் கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here