கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பதாக அறிவித்த 12 மணி நேரத்தில் 10 லட்சம் அமெரிக்க டாலரையும், 24 மணி நேரத்தில் 15 லட்சம் அமெரிக்க டாலரையும் நன்கொடையாகப் பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் அவருக்கு நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட இருக்கிறார். இவரது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். 54 வயதான கமலா, குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 4வது பெண்.

இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் இந்திய அமெரிக்கர் ஒருவர் தேர்தலில் போட்டியிட 24 மணி நேரத்துக்குள் அதிக நிதி திரட்டியது இதுதான் முதன் முறை. கமலாவிற்கு சுமார் 38 ஆயிரம் பேர் நன்கொடைகள் வழங்கியுள்ளனர். இதற்காக, தனக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here