அமெரிக்க அதிபரின் புதிய அதிநவீன லிமோசின் கார் : மிரட்டும் சிறப்பம்சங்கள்

The £1.2million limousine was presented to the President in 2018, replacing the previous Cadillac One, used by Barack Obama.

0
307

பிப்ரவரி 24 மற்றும்25 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகிய இருவரும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

டிரம்ப்பின் இந்தியப் பயணம்வெள்ளை மாளிகையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், இந்தியாவில் தன்னை லட்சக்கணக்கான மக்கள் வரவேற்பார்கள் என்று டிரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், விமானம் மூலம் குஜராத் வந்தடையும்டிரம்ப், வரும்24 ஆம் தேதி அகமதாபாத் நகரில்நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார். மேலும், விமான நிலையத்தில்இருந்து சபர்மதி ஆசிரம் மற்றும் புதிய ஸ்டேடியம் திறப்பு விழாவிலும் பங்கேற்க இருக்கிறார்.மேலும், 22 கிமீ தூரத்திற்கு சாலை மார்க்கமாக BEAST என பெயரிடப்பட்ட தனது காரில் பயணிக்கிறார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிரம்ப் ஆர்மர்டு லிமோசின் (ARMOURED LIMOUSINE)வகையைச் சேர்ந்த இந்த கவச வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, காடிலக் லிமோசின் வகை காரை பயன்படுத்தி வந்தார். இது 1920 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதிபர் டிரம்ப்பின் பாதுகாப்புஅதிகாரிகள், அவர் பயன்படுத்தும் கார்கள், அவருக்கான உடைமைகள், அணி வகுப்பு கார்கள்,பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஆயுதஙகள், வெடிமருந்துகள் ஆகிய அனைத்தையும் இந்தியா கொண்டுவருவதற்கு 7 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் பயன்படுத்தப்பட இருக்கும்அதிகாரப்பூர்வ கார் தனி விமானம் மூலமாக இந்தியா வர இருக்கிறது.

SEI-71508679-e1559545962456

டிரம்ப் பயன்படுத்தும் ஆர்மர்டு லிமோசின் வகை காரின் ஜன்னல்கள் 5 அடுக்கு கண்ணாடியும் பாலிகார்பனேட்டும் கொண்டவை. குண்டு துளைக்காத இந்த கண்ணாடிகளை ஓட்டுனர் அமர்ந்திருக்கும் இடத்தில் மட்டுமே திறக்க முடியும். அதுவும் 3 அங்குலம் மட்டுமே கீழே இறங்கும்

மேலும், ஆர்மர்டு லிமோசின் காரில், ஆபத்து நேரங்களில் வெளியாகும் சிறு துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள், அதிபருக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட ரத்தம் ஆகியவையும் வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுநரின் அறையில், தொலைத்தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டிருக்கும்.

காரின் மையப் பகுதி ஸ்டீல், டைட்டானியம், அலுமினியம் மற்றும் செராமிக்கினால் 5 அங்குல தடிமத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியில் கண்ணீர் புகைக் குண்டுகளை ஏவும் கருவிகள் மற்றும் இரவிலும் தெளிவாக பார்க்கக் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

காரின் ஓட்டுநர், அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகளிடம் பயிற்சி பெற்றவராக இருப்பார். எந்த ஆபத்திலிருந்தும் தப்பிக்கும் வகையில் பயிற்சி பெற்றவராகவும், காரை 360 டிகிரி அளவிற்கு திருப்பும் திறன் கொண்டவராகவும் இருப்பார். காரின் பின்புறத்தில், பென்டகன் மற்றும் அமெரிக்க துணை அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் சாட்டிலைட் தொலைபேசி இணைக்கப்பட்டிருக்கும். மேலும், தீ பற்றுவதைத் தடுக்கும் விதமான நுரையுடனும், குண்டு துளைக்காத வகையிலும் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

காரின் பின்புறம், அதிபரை தவிர, மேலும் 4 பேர் அமரும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கும் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் இடையில், கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். இதனை அதிபர் மட்டுமே கீழே இறக்க முடியும். அங்கு அபாய பட்டன் ஒன்றும், தானியங்கிச் சுவாச கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.

காரின் கதவுகள் 8 அங்குலம் தடிமன் கொண்டவை. போயிங் 757 விமானத்தின் கதவுகளுக்கு இணையான எடை கொண்டவை. கதவை மூடும் பட்சத்தில் கார் 100 சதவிகிதம் அடைத்துக்கொள்ளும் இவை வேதியியல் ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

துளையிட முடியாத கெவ்லர் சிந்தடிக்கால் ஆன டயர்கள், சாதாரண டயர்களை விட ஐந்து மடங்கு வலிமைவாய்ந்தவை. டயர் வெடித்தால் கூட, எந்தவித சலனமும் இன்றி கார் இயங்கும். குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் காரின் சாசீஸ் என்று அழைக்கப்படும் அடிச்சட்டம் அமைக்கப்பட்டிருக்கும்.

அதிபரின் பாதுகாப்புக்காக வரும் வாகனங்களும் பீஸ்ட்(BEAST) -க்கு இணையான தொழில்நுட்பத்தை கொண்டவை. காஸ்மட்(HAZMAT), ரோட் ரன்னர்(ROADRUNNER), வாட்ச்டவர்(WATCHTOWER), காட்(CAT), காஃப்பேக்(HALFBACK) என்பவை அவை. இதில் காஸ்மட் (HAZMAT) என்பது ஒரு கறுப்பு நிற டிரக்காகும். இவை அணு, வேதியியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களை கண்டுபிடிக்கும் வல்லமை பெற்றவை.

ரோட் ரன்னர்(ROADRUNNER) என்பவை பொதுவாக அதிபர், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆகியோரை தொடர்பில் வைத்துக்கொள்ளும். ENCRYPTED VOICE என்ற குறியாக்கப்பட்ட குரல் மூலமே இந்த தகவல் பரிமாற்றம் நடைபெறும். வாட்ச்டவர்(WATCHTOWER), காட்(CAT), காஃப்பேக்(HALFBACK) வாகனங்களும் அதிபரை பாதுகாக்க மிக நவீன தொழில்நுட்பங்களுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை ஆகும்.

தற்போது பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் தி பீஸ்ட் 2.0
(BEAST) என்ற இரண்டாவது வெர்ஷன் கார்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.12 கோடி என தெரிவிக்கப்படுகிறது.பொதுவாக, இரண்டு கார்கள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒன்று மிகவும் அவசரமான நேரங்களில்உபயோகப்படுத்துவதற்காக வைக்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here