அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை அறிவித்த ஈரான்

0
270

அமெரிக்க அதிபர்‌ டொனால்ட்‌ டிரம்ப்‌ தலையை கொண்டு வருபவருக்கு ஈரான்‌ விலை அறிவித்தது. பாக்தாதில்‌ உள்ள விமான நிலையம்‌ அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில்‌ ஈரானின்‌ ரகசியப்‌ படைப்‌ பிரிவுத்‌ தலைவர்‌ காசிம்‌ சுலைமானி உள்பட 9 பேர்‌ உயிரிழந்தனர்‌.

இந்தச்‌ சம்பவத்தால்‌, ஈரானுக்கும்‌ அமெரிக்காவுக்கும்‌ இடையே மீண்டும்‌ போர்‌ மூளும்‌ அபாயம்‌ ஏற்பட்டுள்ளது. இதனால்‌, வளைகுடா நாடுகளில்‌ பதற்றம்‌ நிலவுகிறது.

இந்த நிலையில்‌, காசிம்‌ சுலைமானி இறுதி ஊர்வலம்‌ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்‌ ஆயிரக்கணக்கானோர்‌ பங்கேற்றினர்‌. இது அந்நாட்டின்‌ அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில்‌ ஒளிபரப்பப்பட்டது. அப்போது மூத்த அதிகாரி ஒருவர்‌ பேசுகையில்‌,

ஈரானில்‌ 80 மில்லியன்‌ மக்கள்‌ வசிக்கின்றனர்‌. எனவே அதனை அடிப்படையாகக்கொண்டு அமெரிக்க அதிபர்‌ டொனால்ட்‌ டிரம்ப்‌ தலையை கொண்டு வருபவருக்கு 80 மில்லியின்‌ அமெரிக்க டாலர்கள்‌ பரிசு வழங்கப்படும்‌ என்று தெரிவித்தார்‌. மேலும்‌, ஈரானைச்‌ சேர்ந்த ஒவ்வொருவரும்‌ தங்கள்‌ சார்பில்‌ 1 அமெரிக்க டாலர்‌ வழங்கி உதவ வேண்டும்‌ எனவும்‌ வலியுறுத்தினார்‌.

முன்னதாக, ஈரான்‌ அதிபர்‌ பேசுகையில்‌, அமெரிக்காவின்‌ வெள்ளை மாளிகை மீது எங்களால்‌ தாக்குதல்‌ நடத்த முடியும்‌. அதற்கான சக்தி எங்களிடம்‌ உள்ளது, சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம்‌. போர்‌ அறிவிக்கப்பட்டால்‌ அது அமெரிக்காவுக்கு தான்‌ தோல்வியாக அமையும்‌ என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீது ஈரான்‌ போர்‌ தொடுக்க நினைத்தால்‌, அங்கு அடைத்துவைக்கப்பட்ட பிணைக்‌ கைதிகளை குறிக்கும்‌ வகையில்‌ ஈரானுக்கு சொந்தமான 52 இடங்களில்‌ தாக்குதல்‌ நடத்தப்படும்‌ என அமெரிக்க அதிபர்‌ டொனால்ட்‌ டிரம்ப்‌ தெரிவித்திருந்தார்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here