அமெரிக்கா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த வருடம் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் அவர்களை பின்னுக்குத் தள்ளி ஜோ பைடன் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸின் வீரியத்தை குறைப்பதற்காகவும் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாக நடைபெற்ற முனிச் பாதுகாப்பு செக்யூரிட்டி மாநாட்டில் பேசிய ஜோ பைடன் அவர்கள், கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் அமெரிக்காவுக்கும் நட்பு நாடுகளுக்கு ஏற்பட்ட கசப்புகள் களையப்படும் எனவும் உலகத்துடன் இணக்கமாக பயணிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து சுதந்திரத்தை பாதுகாப்பது சட்டங்களை மதிப்பது, வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற விஷயங்களில் அமெரிக்க இனி கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ள அவர், தற்போது அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here