வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை உள்பட பெரும்பாலான உலக நாடுகளும் வரவேற்று தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – ஐ அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார். இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

மேலும், அணு ஆயுதத்தை முற்றிலுமாக்க் கைவிடுவது என்பது, இரு தரப்புக்கும் இடையே, முரண்பாடுகள் குறைவது மற்றும் இருதரப்பு புரிதலைச்சார்ந்தது எனவும் கிம் கூறியதாக வடகொரியா அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்