அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போரில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சீனா வரி விதித்துள்ளது. அதாவது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

தொழில் சார்ந்த காப்புரிமைச் சட்டங்களை மதிக்காமல் சீனா தொழில்நுட்பங்களை திருடியது , முறையற்ற வணிகக் கொள்கைகளை சீனா கொண்டிருப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 5,000 கோடி டாலர் மதிப்புக் கொண்ட சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் .

இதனால் வர்த்தக போர் உருவாகும் என்று அஞ்சப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை உயர்த்தியுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 659 பொருட்களுக்கு 25 சதவீத வரியை உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மதிப்பு பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சீனா வரி விதித்துள்ளது.

இதுதொடர்பாக சீன செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்கள், வாகனங்கள், மீன் உணவுகள் உள்பட 545 பொருள்களுக்கும், வேதியியல் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 114 பொருள்களுக்கும் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 6ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வரி விதிப்பின் மூலம் பொருட்களுக்கான வரி சீனாவில் உயர்த்தப்படும் இதனால் அமெரிக்க பொருட்களின் விற்பனையும் சரியும் என தெரிகிறது. இந்த வரி விதிப்பால் மற்ற ஐரோப்பிய நாடுகளின் பொருட்களின் விலை குறைவாக கிடைக்கும். அதனால் சீனா ஐரோப்பிய நாட்டு பொருட்களை வாங்க நேரிடும் . இது அமெரிக்காவுக்கு பின்னடைவைத் தரலாம் .

(இந்தச் செய்தி பல தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here