அமெரிக்காவின் சவுத் டகோடாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான Pilatus PC-12 ரகத்தை சேர்ந்த சிறிய விமானம் ஒன்று சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து 12 பேருடன் புறப்பட்டுச் சென்றது. புறப்பட சில நிமிடங்களில் சாம்பர்லின் பகுதியில் இருந்த பாறைகளில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், விமானி மற்றும் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சவுத் டகோடாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here