அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது: டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட்

Dr Robert Redfield, director of the US Centers for Disease Control and Prevention (CDC) has said that the country is probably about to spend $7 trillion because of coronavirus outbreak during a House Energy and Commerce Committee hearing held on Tuesday.

0
299

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 23 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 121,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது அரிசோனா, கலிபோர்னியா, கொளராடோ, டெலாவேர், புளோரிடா, ஜார்ஜியா, ஹவாய், இடாஹோ, கன்சாஸ், மிச்சிகன், மிசிசிப்பி, மிசவுரி, மொன்டானா, நெவாடா, ஓஹியோ, ஓக்லஹோமா, ஒரேகான், தென் கரோலினா, டென்னசி, டெக்சாஸ், உட்டா, வாஷிங்டன், மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்சின் மற்றும் வயோமிங் ஆகிய 25 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இது குறித்துப் பேசிய அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட்,  கொரோனா வைரஸ் இந்த நாட்டை மண்டியிட வைத்துள்ளது என்று கூறி உள்ளார்.

ஹவுஸ் எனர்ஜி அண்ட் காமர்ஸ் கமிட்டி விசாரணையின் போது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் கூறியதாவது:-

இந்த வைரஸை கட்டுப்படுத்த நாங்கள் அனைவரும் செய்யக்கூடிய சிறந்ததை நாங்கள் செய்துள்ளோம். ஒரு சிறிய வைரஸ் காரணமாக நாடு சுமார் 7 டிரில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது. 

“பொது சுகாதார தரவுகளின் முக்கிய திறன்களில்”பல தசாப்தங்களாக குறைந்த முதலீட்டை இந்த வைரஸ் எடுத்துக்காட்டுகிறது. உடைந்த அமைப்பை சரிசெய்ய வேண்டிய நேரம் இது என கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here