‘அமெரிக்காவுடன் இனி பேச்சே இல்லை’: அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டம்

Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei said Friday his country will not negotiate with the United States because America would only use talks for propaganda purposes.

0
98

ஏவுகணைகள் சோதனை, அணு ஆயுதச் சோதனை தொடர்பாக இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் மூத்த மதத் தலைவரான அயத்துல்லா அலி காமெனி  கூறும்போது, “அமெரிக்காவின் கொடுமையான பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது, ஏவுகணைமற்றும் அணுசக்தி சோதனைகளை நிறுத்துவது அமெரிக்காவின் நோக்கம்.

தேசிய திறன்களை நம்புவதும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் நம் மீதான அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்க்க உதவும்” என்று அயத்துல்லா அலி காமெனி  தெரிவித்தார்.

அணுஆயுதச் சோதனை தொடர்பாக, அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்து வருகிறது. ‘சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்’ என, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும், புதிய பொருளாதாரத் தடையை டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ‘ஏவுகணை, அணு ஆயுதச் சோதனைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை’ என, ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here