அமெரிக்கா தொடர்ந்து அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு வலியுறுத்தினால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும் என்று வட கொரியா கூறியுள்ளது.

டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்க உள்ளது.

தனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராக உள்ளதாக வட கொரியா கூறிய பிறகு, இந்த ஜூன் 12 ஆம் தேதி சந்திப்பது முடிவானது .

அமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், அது பற்றி மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று வட கொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வட கொரியா , தென் கொரியாவுடன் இன்று(புதன்கிழமை) நடக்க இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும், படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.

”தென் கொரியாவுடன் இணைந்து ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் நிலையில், வட கொரியா-அமெரிக்க இடையில் பேச்சுவார்த்தை நடக்குமா என்பது சந்தேகமே ” என்று கேசிஎன்ஏ கூறியுள்ளது.

டொனால்ட் டிரம்ப்- கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை குறித்து வட கொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது தங்களுக்கு தெரியாது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை கோபப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து ராணுவ பயிற்சியினை நடத்தியது.

இந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியா கூறியுள்ளது.

1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த
பயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியது .

ஆனாலும் புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பாருங்கள்: சில சோற்றுப்பருக்கைளுள் மறையும் பெரும் அரசியல் பூசணிக்காய்கள்!

இதையும் பாருங்கள்: வேலைகளைத் தேர்வு செய்வது எப்படி? நமக்குப் பிடித்த வேலைகள் எப்போது கிடைக்கும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்