அமெரிக்காவில் 3,80,000 வீடியோக்கள் நீக்கம் : டிக்டாக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை

0
105

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. இதனால், சீனாவிற்குப் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பும், அதன் லாபம் இந்தியாவிற்கும் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், 59 செயலிகள் மூலம் இந்தியர்களினால் சீனாவிற்குக் கிடைக்கும் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாய். எனவே, 59 செயலிகள் தடையால் இந்தியச் சந்தையில் சீனாவின் மிகப்பெரிய வியாபாரத்திற்கு இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பினர் கூறியதைத் தொடர்ந்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம்உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக் கொள்கிறது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்வற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும்.  இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின்தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதை கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும். இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன் என இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் கூறினார். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்காவில், தனது நிறுவனத்தின் வெறுப்பு பேச்சு கொள்கையை மீறும் வகையிலான 3,80,000 வீடியோக்களை இந்த ஆண்டு டிக்டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.

இனவெறி அடிப்படையிலான துன்புறுத்தல்களைக் கொண்ட மற்றும் அடிமைத்தனம் போன்ற விசயங்களை உள்ளடக்கிய பதிவுகள் தங்களது நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விசயங்களாகும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டமைக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி இல்லை என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக 1,300 கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here