இந்தியர்கள் அமெரிக்காவில் வேலைதேடுவது குறைந்துள்ள நிலையில் கனடா, பிரிட்டனில் வேலைதேடுவது அதிகரித்துள்ளது.

உலகளாவிய வேலைதேடும் இணையத்தளமான இண்டீடு, வெளிநாடுகளில் இந்தியர்கள் வேலைதேடுவது பற்றிய ஆய்வை வெளியிட்டுள்ளது.

2016ஆகஸ்டு முதல் 2018ஜூலை வரையிலான இரண்டாண்டுக் காலத்தில் இந்தியர்கள் இணையத்தளங்கள் வழியாக அமெரிக்காவில் வேலை தேடுவது 60 விழுக்காட்டில் இருந்து ஐம்பது விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் கனடாவில் வேலை தேடும் இந்தியர்களின் விகிதம் 6விழுக்காட்டில் இருந்து 13விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பம், நிதி ஆகிய துறைகளில் படித்தவர்களுக்குக் கனடாவில் நல்ல ஊதியம் கிடைப்பதும், கனடாவுக்குச் செல்வதற்கான விசா நடைமுறைகள் எளிதாக இருப்பதுமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதேபோல் இணையத்தளங்கள் வழியாக பிரிட்டனில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.