அமெரிக்காவில் பின்னடைவைச் சந்தித்த தலைவரின் ‘தர்பார்’ வசூல்

0
476

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி உலககில் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் வெளியானது. 

கடந்த வாரம் 9 ஆம் தேதி வெளியான ‘தர்பார்’ படம் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலையும், உலகம் முழுவதிலும் ஒட்டு மொத்தமாக 200 கோடி வசூலைப் பெற்று இன்னும் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் தர்பார் வசூல் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

எதிர்பார்த்த வசூலை  அங்கு பெற முடியவில்லை என்பதுதான் தற்போதைய நிலவரம். ‘தர்பார்’ வெளியான அடுத்த இரண்டு நாட்களில் மகேஷ்பாபு நடித்த ‘சரிலேரு நீக்கெவரு’ மற்றும் அல்லுஅர்ஜுன் நடித்த ’அலா வைகுந்தபுரம்லோ’ ஆகிய படங்கள் வெளியாகின. அந்தப் படங்கள் பெரிய வரவேற்பைப்பெற்றதால்’தர்பார்’வசூல் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது.

ஜனவரி 17 ஆம் தேதி முடிய ‘தர்பார்’ படம் 15 லட்சம் யுஎஸ் டாலர், அதாவது 10.84 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதே சமயம் ‘அலா வைகுந்தபுரம்லோ’ 15.18 கோடியும், ‘சரிலேரு நீக்கெவரு’ 13.54 கோடியும் வசூல் செய்துள்ளன.

கடந்த வருடம் ரஜினி நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படம் 25 லட்சம் யுஎஸ் டாலர், அதாவது, 17 கோடியே 75 லட்சம் வசூலித்திருந்த நிலையில் அதைவிடக் குறைவாகத்தான் ‘தர்பார்’வசூல் அமையும் என தவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here