உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் உள்பட 10 கோடி அமெரிக்கர்கள் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். நேற்று(சனிக்கிழமை) தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக் மற்றும் வி சாட்செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் கூறியிருந்தது.
அதனைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டு இருந்தது. அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை கூறியது.
இந்நிலையில் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்களுடன் பைட்டான்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி டிக்டாக் குளோபல் என்ற பெயரில் உருவாக்கப்படும் புதிய நிறுவனத்தில், அமெரிக்கர்கள் அதிக அளவில் இயக்குநர்களாக இடம்பெற்றிருப்பர். மேலும், டிக்டாக் தரவுகளை ஆரக்கிள் நிறுவனம் அமெரிக்காவிலேயே சேகரிக்கும்.
புதிதாக 25 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். மேலும், அமெரிக்க இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காக டிக்டாக் நிறுவனம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 36 ஆயிரத்து 805 கோடி ரூபாய் வழங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தக்த்துறை தெரிவித்துள்ளது. ஆராக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக் டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)