அமெரிக்காவில் கடந்த 24 மணி நேர கொரோனா அப்டேட்

US COVID-19 Updates: The US has now recorded 4,765,170 total cases with 156,668 deaths, making it by far the worst-hit country in the world.

0
131

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்குப் பரவி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேல்பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) 54,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் இன்று(புதன்கிழமை) காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 49,18,420-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,362 பேர்உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,60,290 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 24,81,680 பேர் குணமடைந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here