வேய்மோ ஆட்டோ மொபைல் நிறுவனம் ஓட்டுனரே தேவைப்படாத கார்களை தயாரித்துள்ளன.வேய்மோ ஆட்டோ மொபைல் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் பேரென்ட் கம்பெனியான ஆல்ஃபாபெட் இன் கார்ப்பரேஷன் நிறுனத்தின் கீழ் செயல்பட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Dr6W-N9VAAAYxg7

ஓட்டுனரே தேவைப்படாத இந்த கார்களில், செல்ல வேண்டிய லொகேஷனை சரியாக செட்(set) செய்துவிட்டால் போதும்; வேய்மோ அந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்று விடும். ஓட்டுனரே இல்லாத கார்கள் எதுவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இதுவரை வந்தது இல்லை. அடுத்த மாதம் முதன் முறையாக கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் இந்த கார்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது.

சென்சார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த காரில் உள்ள கருவிகள், தேவைப்படும் இடங்களில் திரும்புவது, நிறுத்திக் கொள்வது, ஹார்ன் அடிப்பது உள்ளிட்டவற்றை சுயமாக செய்து கொள்ளும். இந்தக் கார்களை பொது இடங்களில் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, அடுத்த மாதம் அமெரிக்காவில் இதன் முதல் சேவை தொடங்கப்பட உள்ளது.

waymo-800x533

முதலில் ஃபீனிக்ஸ் மற்றும் அரிசோனா ஆகிய பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சேவை ஆரம்பிக்கப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்டு, யாருக்கெல்லாம் இந்த சேவை வழங்கப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஓட்டுனரே இல்லா கார்களை உருவாக்கும் பணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வேய்மோ கார்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஆட்டோ மொபைல் துறையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஓட்டுனரே இல்லாமல் சுயமாக இயங்கும் கார்களை வேறு எந்த நிறுவனமும் வடிவமைத்தது இல்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்