நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். குடும்பத்துடன் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புகிறார்.

ஓய்வுக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் நியூயார்க்கில் இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அங்கு கடைவீதியில் எளிதில் அடையாளம் தெரியாத வகையில் நியூயார்க் நகரில் வலம் வந்திருக்கிறார்.ஆனாலும் நடிகர் ரஜினிகாந்தை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள், அவருடன் படம் எடுத்துள்ளனர்.

நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு கொண்டாட்டம் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். நியூயார்க்கை வலம் வரும் ரஜினிகாந்த் டைம்ஸ் கொயர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது நடிகர் ரஜினிகாந்தின் மருமனும் நடிகருமான தனுஷ் தனது டிவிட்டர் பதிவில் ஒரு படத்தை வெளியிட்டு ரசிகர்களின் படபடப்பை அதிகரித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்