அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் குழந்தைகளின் கொரோனா பாதிப்பு 15% அதிகரிப்பு

Nearly 550,000 children in US have been diagnosed with COVID-19 since the onset of the pandemic, according to a new report of the American Academy of Pediatrics and the Children’s Hospital Association

0
217

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.  ஜான்ஸ்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, இன்று(புதன்கிழமை) வரை அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 66,03,509 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 195,727 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 5,50,000 குழந்தைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கm வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை மட்டுமே 72,993 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு வாரங்களில் குழந்தைகளின் கொரோனா பாதிப்பு 15% அதிகரித்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 729 என்ற கணக்கில் தற்போதுதொற்று பரவல் உள்ளது. 

மொத்தமாக கொரோனா சிகிச்சை பெறுவோரில் 0.6 முதல் 3.6% வரை குழந்தைகள் உள்ளனர். மேலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 0-0.3% வரை உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here