அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு பாராளுமன்றத்தை அணுக, ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் அந்த முயற்சி முடங்கிப் போனது.

ஆனால் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் டிரம்ப், மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை சமீபத்தில் பிறப்பித்தார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, கலிபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து, கலிபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது மனுவில், நாட்டின் அவசரநிலையை அறிவித்திருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், டிரம்பின் அவசர நிலை பிரகடனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்துப் பேசிய கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் சேவியர் பெசிரா, ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், மக்களின் வரிப்பணத்தை திருடுவதையும் தடுப்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here