அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் வசிக்கும் மக்கள் கடந்த திங்கள்கிழமை காலை, தங்கள் வீட்டு வாசல்களில் பழைய தொலைக்காட்சி பெட்டிகளை வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். இந்த ஆச்சர்யமூட்டும்  நிகழ்வு அமெரிக்காவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெர்ஜீனியா மாநிலத்தில் இரவு நேரத்தில் தலையில் பழைய டிவி பெட்டியை ஒன்றை அணிந்துக்கொண்டு சுமார் 60 பழைய தொலைக்காட்சி  பெட்டிகளை அங்கு வசிக்கும் மக்களின் வீட்டு வாசல்களில் விட்டு சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அந்த வினோதமான டி.வி மனிதன் குறித்த எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதே போன்று மற்றொரு சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வினோதமான நபரை அப்பகுதி மக்கள் “டிவி சாண்டோ கிளாஸ்” என  கூறுகின்றனர். இந்த நபரின் இச்செயலைஅப்பகுதி மக்கள் குறும்புத்தனமான செயலாகவே கருதுகின்றனர். மேலும், அந்நபர் எந்த விதமான சட்ட மீறுதல்களிலும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.