அமீரகத்தில் கேமிரா இல்லாத திறன்பேசி அறிமுகம்

0
752

செல்பேசி என்றாலே பெரும்பான்மையானவர்கள் அதனைத் தொலைபேசுவதைக் காட்டிலும் புகைப்படம் எடுக்க, காணொளி எடுக்க, பாட்டு கேட்க, ஜிபிஎஸ் பார்க்க என்றே பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் காரணங்களுக்காகவே செல்பேசியைப் பல நிறுவனங்களில் அனுமதிப்பதில்லை. அமீரகத்தில் குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், ராணுவத்தில், காவல்துறையில் எல்லாம் பாதுகாப்பு காரணத்திற்காகச் செல்பேசி அனுமதி இல்லை. ஊழியர்கள் தங்களது செல்பேசியை வெளியே பாதுகாவலரிடம் கொடுத்து அதற்கான டோக்கன் பெற்றே உள்நுழைகிறார்கள். இதை அறிந்து கொண்ட இந்திய செல்பேசி உற்பத்தியாளரான லாவா சர்வதேச நிறுவனம் ஜிபிஎஸ் மற்றும் கேமரா இல்லாத ‘ஐரிஸ் XS’என்ற புதிய ரக திறன்பேசியை வெளியிட்டுள்ளது. இது பிரத்தியேகமாக மத்திய கிழக்கு பகுதிக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த ஆறு மாதங்களில் அமீரகத்தில் மட்டுமே முப்பத்தி நான்காயிரத்திற்கும் மேலான திறன்பேசிகள் விற்பனையாகியுள்ளன என்று லாவா சர்வதேச நிறுவனத்தின் மத்திய கிழக்கு பொது மேலாளர் பில்லி ல்லுகோ தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் கிடைக்கும் இந்தத் திறன்பேசியின் விலை திர்ஹம் 399 (ரூ 7192) மட்டுமே.

ஜிபிஎஸ் மற்றும் கேமிரா இல்லாத செல்பேசிகளில் இணைய உலாவுதல் மிக எளிதாகவும் வேகமாகவும் இருக்கிறதாம். காரணம் புகைப்படங்கள், காணொளிகள், ஜிபிஎஸ் போன்றவைதான் திறன்பேசியின் பெரும்பாலான செயல்நினைவை எடுத்துக் கொள்கிறதாம். அதெல்லாம் இல்லாத திறன்பேசி வேகமாக இருப்பதில் ஆச்சர்யமென்ன?

பகிர்க
முந்தைய கட்டுரைஇலங்கை மீனவர்கள் 34 பேர் விடுதலை
அடுத்த கட்டுரைபுளூட்டோவின் புது முகம்
துபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பானு பிறந்து வளர்ந்தது சென்னயில். 'நமது நாயகம்' என்ற நபிகள் நாயகம் பற்றிய நூலை எழுதியவர். பட்டிமன்ற பேச்சாளர். அமீரகத்தில் தமிழ் வானொலியொன்றில் பகுதி நேர அறிவிப்பாளராக செயல்படும் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் உண்டு. வலையுலகில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படைத்து வரும் இவர் பெண்ணியச் சிந்தனையும், நேர்படப் பேசுதலும் இவரது சிறப்பியல்புகள். மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது 'கிறுக்கல்கள்' வலைப்பதிவில் காரமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்