பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது. இதனிடையே சொராபுதீன் சேக் என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜன.12) கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும், இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் தெரிவித்தார். அப்போது நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் செய்தியாளர்கள் நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு குறித்து குறிப்பிடுகிறீர்களா என கேட்டதற்கு ஆவர் ஆமாம் என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தாரம் நாயக், அமித்ஷாவுக்கு எதிரான கிரிமினல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்